காதலிக்கவில்லை உன்னை
காதலிப்பதாய் நினைக்கவுமில்லை
இரண்டு வருடம் உன்னுடன் பழகிய நாட்கள்
இனிக்காமல் இருந்ததுமில்லை
வீம்பாய் நீ என்னுடன் சண்டையிட்ட நாட்கள்
விருப்பத்துடன் நினைக்காமல் இருந்ததுமில்லை
மகிழ்ச்சியுடன் நீ பகிர்ந்த காதலை
மறுக்கிறேன்
என் பெற்றோருக்காக